பிரதமரிடம் அதிமுக சரண் – ரன்தீப் சிங் சுர்ஜிவாலா விமர்சனம்!
அதிமுகவினர் பிரதமர் மோடியிடம் சரண் அடைந்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ், பாஜகவின் மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்திகளை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் அவர் பேசியது; பிரதமர் மோடியிடம் அதிமுகவினர் சரண் அடைந்துவிட்டதாகவும் தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சி மாறினால் வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.