திட்டமிட்டு தான் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார் – முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு!
திட்டமிட்டு தான் திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு அதிமுக அரசு மீது அவதூறான கருத்துக்களை கூறி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவருடைய பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. மக்கள் எங்க பக்கம் இருக்கின்றனர் என முதல்வர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கவும் மற்றும் அவரின் நினைவாகவும் வேத இல்லம் அம்மா நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் வேளச்சேரி தொகுதியில் தண்ணீர் தேங்கிய பகுதிகளை நான் நேரில் வந்து ஆய்வு செய்தேன். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.மேலும், வேளச்சேரியில் 7 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். மக்களுக்கான சிறப்பான திட்டங்கள் அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.