தமிழ்நாடு

தலைவனுக்கு தாதா சாகேப் விருது; மிகுந்த மகிழ்ச்சி – பிரதமர் மோடி வாழ்த்து!

தலைவனுக்கு தாதா சாகேப் விருது அறிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.1969ம் ஆண்டில் இருந்து திரைத்துறையில் சிறப்பாக செய்யப்படுவோருக்கு அளிக்கப்படும் விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் சிறப்பான பங்கை கொடுத்ததற்கு இந்த தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்துக்கு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில்; பல தலைமுறைகளாக பிரபலமான, ஒரு சிலரின் பணிகள் பெருமை கொள்ளலாம், மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் அன்பான ஆளுமை அது நடிகர் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

பின்னர் பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார். இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில் ; மதிப்புக்குரிய பிரதமர் மோடிக்கு நன்றி. மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே கிடைத்தற்கு விருது பெருமைப்படுகிறேன். உங்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.