பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் – முதல்வர் பழனிசாமி விமர்சனம்!
பொய் பேசுவதற்காக திமுக தலைவரை ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
இன்று குன்னூர் தொகுதி அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக பிடித்த மாவட்டம் நீலகிரி. இந்த மாநிலத்துக்கு எந்த வாக்குறுதி சொன்னாலும் நிறைவேற்றப்படும். வசதியற்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் உயர் கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக சிறந்து விளங்குகிறது.
கொரோனா சமயத்தில் இலவசமாக அரிசி, 1000 ரூபாய் நிதி, பொங்கலுக்கு 2,500 ரூபாய் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல சிறப்பான திட்டங்களை மக்களுக்கு செய்து கொடுப்போம் என தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர்; கருணாநிதியை தொடர்ந்து ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என்ற குடும்ப அரசியல் தொடர்ந்து வருகிறது. பொய் பேசவதற்காக திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் திமுக தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு அழிந்துவிடும். கொள்ளை அடிக்கிற குடும்பம் ஆட்சிக்கு வரக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.