அரசியல்

தமிழகத்தில் கண்ணியமாக இருந்த அதிகாரி அண்ணாமலை – அமித்ஷா புகழாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மூத்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இதில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை செய்தார். பின்பு, இவருக்கு பெண்கள், பெரியோர்கள் மற்றும் அனைவரும் நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். முஸ்லிம் பெண்களும் ஆதரவு தெரிவித்து அண்ணாமலைக்காக பிரச்சாரத்தை செய்கின்றனர்.

இந்நிலையில், இன்று அண்ணாமலை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பை மேற்கொண்டார். அப்போது திறந்த வாகனத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அமித்ஷா பொதுமக்களிடம் வாக்குகள் கேட்டபடி வீதி வீதியாக வலம் வந்தார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா உடன், மாநில தலைவர் எல்.முருகன், அதிமுக மக்களவை உறுப்பினர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். இதன் பின்பு பேசிய அமித்ஷா; மொத்த தமிழகத்தில் நேர்மையாகவும் கண்ணியமாகவும் இருந்த அதிகாரி அண்ணாமலை தான். இவர் மக்களுக்கு நன்மைகள் செய்பவர். இவரை வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என பேசினார்.

மேலும், தமிழ் நாடு வளர்ச்சி பெறுவதற்கு பாஜக அதிமுக கூட்டணி தவிர வேறு எந்த கட்சியாலும் கொடுக்க முடியாது. இதனால் பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார் .