தமிழ்நாடு

தமிழ் பாரம்பரிய உடையில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிரதமர் மோடி!

தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பிரதமர் மோடி நேற்று முன்தினம் தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதனிடையே நாளை மதுரையில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு பிரதமர் மோடி இன்று சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.இதன் பின்பு இன்று இரவு 8.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை அணிந்து கோவிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். மேலும், அவர் இன்றிரவு மதுரை பசுமலை கேட் வே ஓட்டலில் தங்கி நாளை ரிங் ரோடு அம்மா திடலில் கூட்டணி கட்சி வேட்பாளகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.