தேர்தல் கருத்து கணிப்பில் திமுகவுக்கு சாதகமாக சுனாமி வீசிக்கிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு சாதகமாக சுனாமி வீசுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய, தமிழக முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். இவர் ஏன் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவை பார்வை செய்தாரா? ஆனால் நான் சென்று பார்வையிட்டேன். இதற்கு திமுகவின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி கொடுத்தோம் என தெரிவித்தார்.
தற்போது ஒரு வாரமாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதில் முதல் தேர்தல் பிரச்சாரத்தை நான் மேற்கொண்டபோது 200 தொகுதிகளில் வெற்றி என நினைத்து இருந்தேன். இப்போது பார்க்கும் பொழுது 234 தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. தமிழகம் முழுவதும் திமுக வின் சாதகமாக அலையல்ல சுனாமி வீசிகிறது என தெரிவித்தார்.
மக்களுக்கு தெரியும் இந்த அரசு எதையும் செய்யவில்லை, ஊழல் தான் செய்தது. இந்த ஆட்சி மாறவேண்டும் என்று நினைத்தால் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என ஸ்டாலின் கேட்டு கொண்டார்.