கார்ப்பரேட் திமுக – முதல்வர் பழனிசாமி சாடல்!
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
இன்று மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது; அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். தமிழ் நாடு வளர்ச்சி பெறுவதற்கு மத்திய அரசு பல நலத்திட்டங்களை கொண்டு வருகிறது. பல்வேறு சமயங்களில் உதவி செய்கிறது. இந்தியாவுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். கொரோனா வைரஸை அழிப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பிரதமரின் தீவிர நடவடிக்கையால் விஞ்ஞானிகள் முயற்சி செய்து தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
நம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு காரணம் மத்திய அரசு திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது தான். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் அமைக்க மற்றும் பல திட்டங்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் என தெரிவித்தார்.
மேலும், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி கட்சி. அங்கு மக்களுக்கு நன்மை கிடைக்காது. அதிமுக தான் மக்களுக்கான கட்சி, மக்களுக்கு உழைக்கும் அரசு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.