ரெய்டு தொடர்ந்தால் கூட நான் அஞ்ச மாட்டோம் – மு.க ஸ்டாலின் ஆவேசம்!
இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதற்கு முக ஸ்டாலின் இந்த ரெய்டு தொடர்ந்தால் கூட நான் அஞ்ச மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ரெய்டு தொடர்ந்தால் கூட நான் அஞ்ச மாட்டோம் – மு.க ஸ்டாலின் பேச்சு!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; ஜெயங்கொண்டான் தொகுதிக்கு வருகிற சமயத்தில் அனிதா என்ற மாணவி தான் ஞாபகத்துக்கு வருகிறார். படிப்புக்காக உயிரைத் தியாகம் செய்த மாணவி என தெரிவித்தார்.
என்னுடைய மகள் செந்தாமரை வீட்டில் 100 காவல்துறை பாதுகாப்போடு வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. அதிமுகவை பாஜக காப்பாற்றிகிறது. இதற்கு முன்பே அமைச்சர்கள், தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி உள்ளனர். நான் கருணாநிதியின் மகன். இந்த வருமான வரி சோதனை கெல்லாம் அஞ்சமாட்டேன். மிசா, எமர்ஜென்சி போன்றவற்றை பார்த்தவன். இதற்கு அஞ்ச மாட்டேன் என தெரிவித்தார்.
மேலும், இந்த வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்றால் பெரும் எழுச்சி ஏற்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.