ஸ்டாலின் தேர்தல் தோல்வி பயத்தில் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பயத்தில் உள்ளார் என பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் தொகுதி வேட்பாளருமான எல்முருகன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் அதிமுக உடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தாராபுரம் சட்ட மன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
இதனிடையே இன்று ஒரு தொலைக்காட்சிக்கு எல்.முருகன் பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர்; பிரதமர் மோடி தாராபுரத்துக்கு வந்து பிரச்சாரம் செய்ததால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். இந்தத் தேர்தலுக்குப் பின் திமுக கட்சி இருக்காது எனவும் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.