அரசியல்இந்தியா

பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கிய தொண்டருக்கு உதவிய பிரதமர் மோடி – குவியும் பாராட்டுக்கள்

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மயக்கமடைந்த பாஜக தொண்டருக்கு உதவி செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான முடிவுகள் மே இரண்டாம் தேதி அறிவிக்கப்படும். இதனால் அந்தந்த காட்சிகள் தீவிர பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இதனிடையே இன்று அசாமில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த சமயத்தில் பாஜகவின் தொண்டர் ஒருவர் நீர் சத்து குறைபாடு காரணத்தினால் மயங்கி விழுந்தார். பிரச்சார கூட்டத்தின் நடுவில் நம்முடைய தொண்டர் ஒருவர் நீர் சத்து குறைபாட்டால் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு உடனடியாக அவசர உதவி, மருத்துவ உதவி செய்ய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த செயல் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.