புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி அளித்த பாஜக – மு.க.ஸ்டாலின் தாக்கு!
புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி அளித்த பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் கடும் போட்டி நிலவி உள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பாஜக நெருக்கடி அளித்ததை மக்கள் மறந்துவிடக்கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய மு க ஸ்டாலின் கூறியது; புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி அளித்ததை மக்கள் மறந்துவிடக்கூடாது. பாஜகவுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற உள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். இதனால் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெறச் செய்யுங்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.