நாளை இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவு; அரசியல் கட்சியினருக்கு முக்கிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் என்னவெல்லாம் செய்யக் கூடாது என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு அறிக்கையின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டது; 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6-4-2021 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறும். 4.4.2021 அன்று மாலை 7.00 மணி முதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு குறிப்பிட்டுள்ளார்.