ஸ்டாலினின் முதல்வர் கனவு நிறைவேறாது – முதல்வர் பழனிசாமி விமர்சனம்!
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் கனவு நிறைவேறாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை செய்து வருகிறார்.
இன்று ஓமலூரில் முதல்வர் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசியவர்; ஸ்டாலினின் பல நாடகங்கள் அரங்கேறி உள்ளது. அவருடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது. பொய் செய்திகளை தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார். மக்களுக்காகவே பணியாற்றும் அதிமுக கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும் என முதலவர் தெரிவித்துள்ளார்.