அரசியல்

உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் – இதுதான் காரணமா!

உதயநிதி ஸ்டாலின் இன்று வாக்களிக்க வந்த சமயத்தில் அவருடைய கட்சியின் சின்னம் அவர் அணிந்திருந்த சட்டையில் இருந்ததால் தேர்தல் விதிமீறல் என்பதால் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகம் 234 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி 30 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற்று முடிந்துள்ளது.திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இதனால் உதயநிதி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுகவுக்காக மக்களிடம் வாக்கு சேகரித்தார்.இன்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் அவரின் குடும்பத்தோடு வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

அந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த சட்டையில் அவருடைய கட்சியின் சின்னமான உதயசூரியன் பதித்திருந்தது. இது தேர்தல் விதி முறைப்படி அப்படி செய்யக்கூடாது. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், அதிமுகவின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.