எம்.பி ரவீந்திரநாத் கார் மீது திடீர் தாக்குதல்; கண்ணாடி உடைப்பு!
இன்று தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் பார்வையிட சென்ற எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் செய்துள்ளனர்.
இன்று தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டிருக்கிறார். இதனால் அந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளை பார்வையிட சென்ற துணை முதல்வரின் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் செய்துள்ளனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாளகவுண்பட்டி கிராமத்திற்கு ரவீந்திரநாத் சென்ற போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக திமுகவினர் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென மர்மநபர்கள் அங்கிருந்து கற்களை வீசி எம்பி ரவீந்திரநாத்தின் கார் மீது தாக்குதல் செய்துள்ளார். இதில் அவருடைய கார் கண்ணாடி உடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.