அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மொத்தமாக 71.79 சதவீதம் வாக்கு பதிவு – விறுவிறுப்பான தேர்தல் களம்!

தமிழ்நாட்டில் மொத்தம் நிலவரப்படி 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் 234 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி 30 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பலரும் தங்களின் ஜனநாயக கடுமையான தேர்தல் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதனிடையே 11:00 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 26.29 சதவீதமும், ஒரு மணி அளவில் 39.61 சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதமும், மாலை 5 மணியளவில் 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதன் பின்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமாக 71.79 சதவீதம் வாக்கு பதிவு நடந்துள்ளது. இதில் அதிகமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைவாக சென்னையில் 59.40 சதவீதம் பதிவாகியுள்ளது.