தமிழ்நாட்டில் இதுவரை 63.60% வாக்குப் பதிவு – விறுவிறுப்பான தேர்தல் களம்!
தமிழ்நாட்டில் இன்று மாலை ஐந்து மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை நடைபெறுகிறது.
இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நிமிடங்களில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ளது.இந்நிலையில் இதுவரை நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பலரும் தங்களின் ஜனநாயக கடுமையான தேர்தல் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே 11:00 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 26.29 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.இதன் பின்பு ஒரு மணி அளவில் 39.61 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மதியம் 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. கடைசியாக மாலை 5 மணியளவில் அப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
மேலும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.