இந்தியா

தேர்வை பயம் இல்லாமல் எதிர் கொள்ளுங்கள் – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!

தேர்வை பயமில்லாமல் எதிர் கொள்ளுங்கள் என மாணவர்கள் பிரதமர்மோடி அட்வைஸ் செய்துள்ளார்.
அத்துடன் தேர்வைப்பற்றி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.

“பரிக் ஷா பே சர்ச்சா” என்கிற “தேர்வுகள் பிரச்சனை இல்லை” என்கிற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கலந்துரையாடி வருகிறார்.

தற்போது இந்த ஆண்டுக்கான “பரிக் ஷா பே சர்ச்சா” என்ற நிகழ்ச்சி இன்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பள்ளி, கல்லூரி மாணவர்கலுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 14 லட்சம் பேர் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி; உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சியாக உள்ளது. தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ளுங்கள். தேர்வை கண்டு அச்சம் தேவையில்லை. மனஅழுத்தம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டு எழுதுங்கள். முதலில் கடினமான கேள்விகளுக்கு பதிலளியுங்கள். நேரத்தை கணிசமாக எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து பாடத்திலும் கவனம் செலுத்துங்கள். தேர்வு என்பது மட்டும் வாழ்க்கை கிடையாது.

தேர்வு எழுத போகும் மாணவர்கள் அதிகம் யோசிப்பதால் அச்சம் ஏற்படுகிறது. மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு வழிகாட்டியாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.