அரசியல்இந்தியா

ரிக் ஷா ஓட்டுநர் இல்லத்தில் உணவு அருந்திய அமித்ஷா – குவியும் பாராட்டுக்கள்!

நேற்று மேற்கு வங்காள மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் ரிக் ஷா ஓட்டுநர் இல்லத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த செயலுக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதியிலும் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனால், அடுத்த கட்ட தேர்தலுக்காக நேற்று மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஹவுரா மாவட்டம் தோம்ஜூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர் ரஜிப் பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இந்தப் பிரசாரத்தை முடித்துவிட்டு அங்கிருக்கும் ரிக் ஷா ஓட்டுநர் வீட்டில் அமித்ஷா ஜேபி நட்டா வேட்பாளர் ரஜிப் பானர்ஜி உள்ளிட்ட பலரும் தரையில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டு உள்ளனர். இதனைக் கண்டு ரிக் ஷாக்காரர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.