இந்தியா

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மம்தா “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்ல துவங்குவார் – யோகி ஆதித்யநாத்!

மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மம்தா “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்ல துவங்குவார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 5 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 10, 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனால் மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே பாஜக வேட்பாளரை ஆதரித்து மூத்த தலைவர்கள் மேற்கு வங்காளத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய யோகி ஆதித்யநாத்; மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைத்த பின்பு ஆன்ட்டி ரோமியோ என்ற குழு அமைக்கப்படும். பாஜக ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் சொல்ல துவங்குவார்.

மம்தா பானர்ஜி சிஏஏவுக்கு எதிராக வன்முறையை தூண்ட ஆதரவு அளித்தார். மத்திய அரசின் திட்டங்களை மேற்கு வங்காள மாநிலத்தில் செயல்படுத்தவில்லை என யோகி ஆதித்யநாத் கடுமையாயக பேசினார்.