எங்கள் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை; கிம் ஜாங் அன் தகவல் – இது உண்மையா?
கடந்த ஆண்டு உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிய முதல் நாள் இருந்து கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கு இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், சுகாதாரம் கட்டமைப்பு பெருமளவில் இல்லாத வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது நம்ப முடியவில்லை என சர்வதேச நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், கடுமையான கட்டுப்பட்டால் கொரோனா வைரஸை தடுத்ததாக உலக சுகாதார நிருவத்திடம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் அறிக்கை மூலம் தெரிவித்தார்.
இதை பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் வடகொரியா பிரதிநிதி எட்வின் சால்வடார் கூறியது; கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி வடகொரியா நாட்டில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என உறுதியானது.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 732 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகளை உலக சுகாதார நிறுவனத்திடம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கிறது என பிரதிநிதி தெரிவித்துள்ளார்.