நாளை 44 தொகுதியில் நான்காம் கட்ட சட்டமன்ற தேர்தல் – விறுவிறுப்பான தேர்தல் களம்!
நாளை மேற்கு வங்காள மாநிலத்தில் 44 தொகுதியில் நான்காம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 91 தொகுதியில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 5 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 10, 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனால் மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், நாளை 44 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக எம்பியும், பாலிவுட் பாடகருமான பாபுல் சுப்பிரியோ, முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி உள்பட பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே அந்தந்த தொகுதிகளில் தேர்தல் ஆணையம் தீவிர பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை அமைத்துள்ளது.