அரசியல்இந்தியா

சிறுபான்மை மக்களின் ஆதரவை நாடும் மம்தா – அமித்ஷா தாக்கு!

சிறுபான்மையின மக்களின் ஆதரவை மம்தா எதிர்பார்த்து உள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 91 தொகுதியில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 5 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 10, 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலால் மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் நேற்று வரை இரு கட்சிகளின் வேட்பாளராக வைத்து மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே இன்று 44 தொகுதிகளில் நான்காம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா கூறியது; மம்தா பானர்ஜி சிறுபான்மை மக்களின் ஆதரவை மட்டும் எதிர்பார்க்கிறார். மற்ற மக்களின் ஆதரவை அவர் எதிர்பார்க்கவில்லை.தேர்தலில் தோல்வி அடையப் போகிறோம் என பயப்படுகிறார். அது நன்றாக தெரிகிறது என அமித்ஷா தெரிவித்தார்.

மேலும், நடந்து முடிஞ்ச 91 தொகுதிக்கான மூன்றாம் கட்ட தேர்தலில் 63-68 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.