சவுரவ் கங்குலி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்; தேர்தல் களம்!
மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று நடந்து வரும் நான்காம் கட்ட தேர்தலில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடியாக கேப்டன் சவுரவ் கங்குலி வாக்கு பதிவு செய்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 91 தொகுதியில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 5 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 10, 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இன்று காலை 7 மணி நான்காம் கட்ட தேர்தல் துவங்கியது. இதனால் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தல் காலை 9:50 மணி நிலவரப்படி 15.85 சதவீதமும், 11.05 மணி நிலவரப்படி 16.65 சதவீதமும், மதியம் 1.37 மணி நிலவரப்படி 52.89 சதவீதமும்,மாலை 3.39 மணி நிலவரப்படி 66.76 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி கேப்டனும், தற்போது பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அவருடைய ஜனநாயக கடமையான அவரின் வாக்கை பதிவு செய்துள்ளார். கங்குலி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்துக்கு சென்று அவருடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.