அரசியல்இந்தியா

அரசியல் மாற்றத்துக்கு தக்க சமயம் – பிரதமர் மோடி பேச்சு!

மேற்கு வங்காள மாநிலத்தில் பல வருடமாக உள்ள அரசியல் சூழ்நிலையை மாற்றுவதற்கான தக்க சமயம் அமைந்து விட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 91 தொகுதியில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 5 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 10, 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று நான்காம் கட்ட தேர்தல் துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியது; கூச்பெஹாரில் நடந்த சம்பவம் மிகவும் கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவுக்கு கிடைத்துள்ள ஆதரவைக் கண்டு மம்தா, அவரின் கட்சி தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்த தேர்தல் தோல்வி பயத்தால் மம்தா மற்றும் கட்சித் தொண்டர்கள் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதுபோல செயல்களை அனுமதிக்க கூடாது என மம்தாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்,10 வருடமாக உள்ள அரசியல் சூழ்நிலையை மாற்றுவதற்கான தக்க சமயம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார்.