அரசியல்தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் உடல்நலக் குறைவால் காலமானார்!

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் போட்டியிட்டார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த மறு நாளே உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கை எண்ணப்பட்டு மாதவராவ் வெற்றி பெற்றால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

இவருடைய மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.