அரசியல்இந்தியா

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – அமித்ஷா உறுதி!

மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் அரசியல் மற்றும் தேர்தலுக்கான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 4 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் ஐந்தாம் கட்ட தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்று நாடியா மாவட்டம் சாந்திபூரில் நடந்த பாஜக பேரணியில் மத்திய உள்துறை அமைச்சரும் மற்றும் பாஜக மூத்த தலைவரான அமித்ஷா கலந்து கொண்டனர்.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா கூறியது; நேற்று நடைபெற்ற நான்காம் கட்ட சட்டமன்றத் தேர்தலில் நான்கு பேரை சுட்டுக்கொன்றது தவிர இங்கு தேர்தல் அமைதியாக நடைபெற்று உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் மற்றும் தேர்தல் ஆகிய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.