இந்தியா

உயிருடன் இருக்கும் நபர் இறந்துவிட்டதாக சான்றிதழ்; அதிர்ச்சியில் உறவினர்கள்!

பீகார் மாநிலத்தில் உயிருடன் இருக்கும் நபரை இறந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் மரண சான்றிதழ் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி சுன்னு குமார் என்ற நபரை அனுமதித்தனர். ஆனால், சுன்னு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து விட்டதாக அவருடைய உறவினர்களிடம் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரின் உடலை தகன மேடைக்கு கொண்டு வந்த உறவினர்கள் கடைசியாக ஒருமுறை அவருடைய முகத்தை பார்த்து உள்ளனர். அப்போது மற்றொருவரின் முகம் இருந்தது தெரிய வந்துள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுன்னு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் வேறு ஒரு நபர் உடையது என்பது தெரியவந்துள்ளது.

இதன் பின் விசாரணை நடத்தியதில் சுன்னு குமார் மருத்துவமனையில் இருந்து உள்ளார் எனவும் மற்றொரு நோயாளியின் உடலை சுன்னு குமாரின் உறவினர்களிடம் கொடுத்து உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் சுன்னு குமார் உறவினர்கள் மருத்துவமனை மீது கோபமடைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.