பாஜக 20 தொகுதியிலும் வெற்றி அடையும் – எல்.முருகன் உறுதி!
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் வெற்றி அடையும் என பாஜக தலைவர் எல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் .
அப்போது ஆந்திராவில் ஒட்டியிருக்கும் தமிழக எல்லையான திருவள்ளூர் அருகில் செய்தியலாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர்; அரக்கோணத்தில் தேர்தல் முன்விரோதம் காரணத்தினால் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது. இதுபற்றி தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் மற்றும் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் வெற்றி அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.