தமிழ்நாடு

யுகாதி, தமிழ் புத்தாண்டு முன்னிட்டு 50 சதவீதம் தள்ளுபடி – மெட்ரோ அட்டகாசம்!

யுகாதி, தமிழ் புத்தாண்டு முன்னிட்டு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அரசு விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டணச் சலுகை கொடுக்கப்படும்.

இதனிடையே இன்று யுகாதி பண்டிகையும், நாளை தமிழ்ப் புத்தாண்டு பண்டிகையும் கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை தினத்தை முன்னிட்டு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் அளவில் மெட்ரோ சேவையை பயன்படுத்தி பல இடங்களுக்கு சென்று குடும்பத்துடன் விடுமுறை தினத்தை கொண்டவர்கள் என்பதால் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.