சினிமா

நடிகர் செந்தில் உள்பட குடும்பத்தில் அனைவரும் கொரோனா உறுதி!

காமெடி நடிகர் செந்தில் உள்பட குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் செந்தில். இவரும் நடிகர் கவுண்டமணி இணைந்து பல படங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்து பல கோடி ரசிகர்களை கவர்ந்தனர்.இதையடுத்து அரசியலிலும் ஈடுபட்டு வந்த நடிகர் செந்தில் அதிமுக, அமமுக பணியாற்றினார். தற்போது நன்மைகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில் நடிகர் செந்தில், அவருடைய மனைவி, மகன், மருமகள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.