நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 4 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் ஐந்தாம் கட்ட தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இதனால் மார்ச் மாதம் 29ஆம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி சுவேந்து அதிகாரி தவறாக பேசியதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த கவிதா கிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து ஏப்ரல் 8 ஆம் தேதி சுவேந்து அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சுவேந்து அதிகாரி ஏப்ரல் 9ஆம் தேதி பதில் அளித்த அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை எனவும் எந்த நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த பதிலை ஏற்றுக் கொண்டாலும் தேர்தல் ஆணையம் கவனமுடன் செயல்பட வேண்டும் என சுவேந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.