ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றம் – மு.க ஸ்டாலின் கண்டனம்!
சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை இருந்த பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என மாற்றப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1979ஆம் ஆண்டு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரால் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்பட்டது.
இதனால், கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என்ற பெயரை மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என மாற்ற வேண்டும் என மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? உடனடியாக மாற்றிடுக. தாமதித்தால் மே.2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் என கண்டனத்துடன் பதிவிட்டுள்ளார்.