இந்தியா

நான்கு மாதத்தை கடந்த போராட்டம் – அசத்தும் விவசாயிகள்!

டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 138வது நாட்களாக விவசாயிகள் தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி துவங்கிய விவசாயிகள் போராட்டம் தற்போது நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால், விவசாயிகள் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 138வது நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதுவரை மத்திய அரசு விவசாயிகளுக்கு இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.