மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் புவனேஷ்வர் குமார் – ஐசிசி அறிவிப்பு!
மார்ச் மாதத்துக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தேர்வாகியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கௌரவப்படுத்தும் வகையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரரை ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்தது. அதில் கிரிக்கெட்டில் சிறப்பாக செயலாற்றிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரைப்போலவே ஆப்கானிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரசித் கான் மற்றும் ஜிம்பாப்வே அணியின் ஸீன் வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஆனால், இதில் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் என்று ஐசிசி அறிவித்துள்ளது.