உலகம்

தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் – அதிபர் ஜோ பைடன் ட்வீட்!

தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டு தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஷிம் வருட புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பல தரப்பு மக்களுக்கு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் இந்த வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு எனதும், எனது மனைவி இருவரின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய்லாந்து, விஷூ புத்தாண்டு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.