அண்ணல் வழி நின்று திமுக கடமையாற்றும்; அம்பேதகருக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சட்டமேதையின் பிறந்தநாளுக்கு பல தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களையும், அவரின் உருவப்படத்துக்கு மலர் தூவியும், அவரின் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல மூத்த தலைவர்கள் தங்களின் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். சட்டதுறையில் தன் திறமையை நிரூபித்தவர். இதன் பின் 1990ஆம் ஆண்டு அவருக்கு “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, கோயம்பேட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இதை குறித்து அவரின் ட்விட்டர் பதிவில் அரசியலமைப்புச் சட்டம் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தி நாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே மனித குலத்தின் ஏற்றம் என மனதில் நிறுத்தி, ஆதிக்கமற்ற – சமத்துவ சமூகம் அமைத்திடுவோம். அண்ணல் வழி நின்று திமுக கடமையாற்றும் என பதிவிட்டுள்ளார்.