கொரோனா எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர்!
கொரோனா பரவல் எண்ணிக்கை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம், தேவையான மருத்துவ வசதிகள் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது; கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு தேவையான மருத்துவ வசதிகள், உபகாரணங்கள் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் 10 சதவீதம் படுக்கைகயில் தான் கொரோனா நோயாளிகள் உள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனையில் 20 சதவீதம் தான் படுக்கைகள் நிரம்பியுள்ளது.
ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவரிடமிருந்து 10 பேருக்கு பரவுகிறது. பொது மக்கள் கட்டாயமாக முககவசம் அணிவது, தனிநபர் இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.