நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கிடைக்க உறுதி – பிரதமர் மோடி!
நம் மக்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கிடைக்க அரசு உறுதியாக உள்ளது என கவர்னர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பல துறை நிபுணர்கள் வல்லுநர்கள், மாநில முதல்வர்கள் என அனைவரிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் நேற்று மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி; 10 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்கிற இலக்கை வேகமாக எட்டிய நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.
தற்போது இருக்கும் தடுப்பூசி மையங்கள் போல புதிய மையங்கள் அமைக்கப்படும். நம் நாடு முழுவதும் உள்ள நம் மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்து கிடைப்பதற்கு அரசு உறுதியாக உள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மக்களின் பங்கேற்பு மிகவும் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.