தமிழ்நாடு

திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் – மு.க.ஸ்டாலின் ட்வீட்!

திருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருநங்கையருக்கு அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று ஆண் – பெண் பாலினத்தவர் போலவே திருநங்கையர் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் திருநங்கையருக்கு அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என முக ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் திருநங்கையர் தினம் இன்று. திருநங்கை எனும் சொல்லுக்கு அரசின் அங்கீகாரம் அளித்து, தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர். அவர் வழியில் திருநங்கையர்-திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவருடைய வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.