உலகம்

மூன்று மாதத்தில் 276 நிறுவனங்கள் மூடல்; கடும் நடவடிக்கை எடுத்த துபாய்!

துபாய் நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேலான நிறுவனங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் விதமுறைகளை மீறியதாக 276 நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது என துபாய் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி துபாய் மாநகராட்சி வெளியிட்ட செய்தியில்; துபாய் நாட்டில் உள்ள நிறுவனங்கள் சரியாக கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி செயல்படுகிறதா என மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேலான நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் முககவசம், சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வருகின்றனரா என ஆய்வு செய்யப்பட்டத்தில் 97.6 சதவீத நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றி உள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த மாதத்தில் 276 நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றாததால் மூடப்பட்டுள்ளது. பின்பு 379 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், இரண்டாயிரம் மேலான நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.