கொரோனாவை தொடர்ந்து இமாச்சலத்தில் பூகம்பம்!
இமாச்சலபிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கங்ரா மாவட்டத்தில் லேசான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 3.5 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பத்தால் அங்கு இருக்கும் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்து உள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த ரிக்டர் அளவு குறைவாக இருந்ததால் மக்களுக்கும், கட்டிடங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனார்.
மேலும், கொரோனா தொடர்ந்து இமாச்சலபிரதேசம் மாநிலத்தில் பூகம்பம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.