பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; சக காவலர் கைது – தஞ்சாவூரில் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பெட்டை காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக காவலரை கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்பவர் முருகானந்தம். இவருடைய காவல் நிலையத்துக்கு நான்கு நாட்களுக்கு முன் ஆயுதப்படை பிரிவில் இருந்து ஒரு பெண் காவலர் பணிக்காக வந்துள்ளார்.

இரவு நேரத்தில் ஓய்வு அறையில் பெண் காவலர் தங்கியுள்ளார். அப்போது அந்த பெண் காவலரிடம் முருகானந்தம் கடந்த 13ஆம் தேதி தவறாகவும், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பற்றி பெண் காவலர் அளித்த புகாரால் முருகானந்த்தை கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனை குறித்து விசாரணை நடந்து வருகிறது.