மேற்கு வங்கத்தில் 5ம் கட்ட தேர்தல்; வாக்களிக்க பிரதமர் மோடி அழைப்பு!
இன்று மேற்கு வங்கத்தில் 5ம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற அனைவரையும் பிரதமர் மோடி அழைத்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 4 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் பிரசாரம் காலை முதல் நடந்து வருகிறது.
இதை பற்று அவரின் ட்விட்டர் பதிவில்; இன்று மேற்கு வங்காளத்தில் ஐந்தாவது கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இதில் அனைவரையும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.