தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள அனைவரும் சின்ன கலைவாணர் விவேக் உடலுக்கு அஞ்சலி!

முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய உடலுக்கு நடிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று காலை 11 மணி அளவில் அவருடைய வீட்டிலிருந்து நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் அவர் இயற்கை எய்தினார்.

இதையடுத்து அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், மற்றும் பலரும் விவேக் மறைக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவருடைய உடலுக்கு நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என அவரின் நடிப்பால் இயற்றப்பட்ட அனைவரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.