சினிமா

தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் நடிகர் விவேக் – அமித்ஷா அஞ்சலி!

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 11 மணி அளவில் அவருடைய வீட்டிலிருந்து நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த சிகிக்சை பலன் அளிக்காததால் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் அவர் இயற்கை எய்தினார்.

இதையடுத்து அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள்=நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், அவருடைய உடலுக்கு நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் அனைவரும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டு உடலுக்கு தமிழக காவல்துறையினர் இறுதிமரியாதையை செய்த பின் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

இவரின் மறைவுக்கு அமித்ஷாவின் பதிவில்; நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம்சாந்தி என பதிவிட்டுள்ளார்.