தமிழ்நாடு

வேளச்சேரியில் மறுவாக்கு பதிவு; விறுவிறுபான தேர்தல்!

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 7 மணி நடைபெற்றது. +

இதனிடையே வேளச்சேரி தொகுதியில் இருந்து இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒரு வி.வி.பாட் எந்திரம் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதை பற்றி அந்த தொகுதியில் உள்ள மக்கள் காவல் துறையிடம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 92வது வாக்கு சாவடியில் இருந்த எந்திரம் 50 நிமிடங்கள் பயன்படுத்தியத்தில் 15 வாக்குகள் பதிவாகியத்தை கண்டுபிடித்தனர்.

இதனால் வேளச்சேரி தொகுதியிலுள்ள 92வது வாக்கு சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று காலை முதல் மறுவாக்குபதிவு வேளச்சேரியில் நடந்து வருகிறது. 92வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் காலை முதல் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.