மேற்கு வங்கம் ஐந்தாம் கட்ட தேர்தலில் 5.45 மணி மணி நிலவரப்படி 78.36 சதவீதம் வாக்கு பதிவு!
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் மீதி உள்ள தேர்தல் ஏப்ரல் 22, 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இன்று தேர்தல் என்பதால் மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஆர்வத்துடன் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்று நடந்த வாக்கு பதிவில் மதியம் 1.30 மணி நிலவரப்படி 54.67 சதவீதமும், மாலை 3.30 மணி நிலவரப்படி 62.40 சதவீதமும், மாலை 4.15 மணி நிலவரப்படி 69.40 சதவீதமும், மாலை 5.45 மணி நிலவரப்படி 78.36 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.