பாஜக முகாம் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு – பரபரப்பில் மேற்கு வங்காளம்!
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் மீதி உள்ள தேர்தல் ஏப்ரல் 22, 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தல் காலத்தால் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் கட்சி அலுவலகங்கள், கட்சி உறுப்பினர்கள் இடையே அடிக்கடி தாக்குதல் நடைபெறுகிறது. இதேனிடையே மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தல் மம்தாவின் வன்முறை அரசியல், அராஜகம் ஆகியவற்றுக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இருக்கும் பாஜக கட்சியின் பிரச்சார அலுவலகத்தின் மீது நேற்றிரவு திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. பாஜக கட்சி அலுவலகம் மட்டுமல்லாமல் அக்கட்சியின் தொண்டர்கள் வீடுகளிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் நல்ல விதமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
மேலும், இந்தத் தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தான் செய்து இருக்க வேண்டும் என பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. இதை பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.